பணம் இருப்பவர்களுக்கு தான் காவல்துறை என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள் - நீதிபதிகள் காட்டம்

பணம் இருப்பவர்களுக்கு தான் காவல்துறை என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள் - நீதிபதிகள் காட்டம்
தூத்துக்குடி காவல்துறையினர் மணல் மாபியாகளுக்கு தான் பாதுகாப்பா என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க கோரிய மனுதாரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மனுதாரருக்கு ஏன் போலீசார் பாதுகாப்பு வழங்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்தும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தங்களின் போக்கை மாற்றவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மனுதாரருக்கு உடனடியாக காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க எஸ்பிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினை ஒத்திவைத்தனர்.
Comments