அண்ணா பல்கலை.யில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டண விவகாரம்... தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

0 930
அண்ணா பல்கலை.யில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டண விவகாரம்... தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தும்படி அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் விடைத்தாள் திருத்தப்பணி தவிர, மற்ற பணிகளுக்கான செலவுகள் செய்யப்பட்டதாகவும், நியாயமான கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்களின் பின்னணியில் தனியார் கல்லூரிகள் உள்ளன, கட்டணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்டால், அது தவறான முன்னுதாரணமாகி விடும், வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் பல்கலைக்கழக நலனுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments