டெல்லியில் 17 ஆண்டுகளுக்குப் பின் நவம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு

0 974
டெல்லியில் 17 ஆண்டுகளுக்குப் பின் நவம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு

டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு நவம்பரில் மிகக் குறைந்த அளவாக 6 புள்ளி 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

டெல்லியில் ஞாயிறன்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 புள்ளி 9 டிகிரி செல்சியசும், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலையாக 24 புள்ளி 2 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

இன்று காலை கடுங்குளிர் நிலவியதால் குறைந்தபட்ச வெப்பநிலை 6 புள்ளி 3 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.

இது 2003ஆம் ஆண்டுக்குப் பின் டெல்லியில் நவம்பர் மாதங்களில் நிலவியதிலேயே குறைந்தபட்ச வெப்பநிலையாகும். 2003ஆம் ஆண்டு நவம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ஆறு புள்ளி ஒரு டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments