திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி.. டி.ராஜேந்தர் தோல்வி...

0 2590
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி.. டி.ராஜேந்தர் தோல்வி...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியிடம், நடிகர் டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் மொத்தம் 1050 வாக்குகள் பதிவாயின. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

டி.ராஜேந்தர் 337 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்றுத் தோல்வி அடைந்தனர். முரளி அணியில் போட்டியிட்ட ஆர்.கே.சுரேசும், சுயேச்சையாகப் போட்டியிட்ட கதிரேசனும் துணைத் தலைவர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

பொருளாளர் பதவிக்கு முரளி அணி சார்பில் போட்டியிட்ட சந்திரபிரகாஷ் வெற்றி பெற்றுள்ளார். கவுரவச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் முரளி அணியின் ராதாகிருஷ்ணனும், ராஜேந்தர் அணியின் மன்னனும் வெற்றிபெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments