தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் காரணமாக ஒதுக்கீட்டு ஆணை பெறாத 3 மாணவிகளுக்கும் மீண்டும் சேர்க்கை ஆணை வழங்கியது சுகாதாரத்துறை

0 6769
தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் காரணமாக ஒதுக்கீட்டு ஆணை பெறாத 3 மாணவிகளுக்கும் மீண்டும் சேர்க்கை ஆணை வழங்கியது சுகாதாரத்துறை

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் கட்ட முடியாது என்பதால், கடந்த 19ஆம் தேதி ஒதுக்கீட்டு ஆணை பெறாமல் சென்ற 3 மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி கட்டணத்தை ஏற்றதை தொடர்ந்து அட்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று தனியார் கல்லூரிகளை தேர்வு செய்த, திருப்பூரை சேர்ந்த திவ்யா, ஈரோட்டைச் சேர்ந்த கெளசிகா, கள்ளக்குறிச்சியை சேர்ந்த தரணி ஆகிய 3 மாணவிகளுக்கும் அதிக கட்டணம் காரணமாக ஒதுக்கீட்டு ஆணையை பெறாமலே சென்றுவிட்டனர்.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணாக்கர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த 3 மாணவிகளை தொடர்பு கொண்டு, அவர்கள் நாளைக்குள்ளாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில், கட்டணம் கட்டாமல் சேரலாம் என திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு ஆணை கொடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments