சர்ச்சைக்குரிய போலீஸ் சட்ட திருத்தத்தை கைவிட்டார் பினராயி விஜயன்

0 1737
சர்ச்சைக்குரிய போலீஸ் சட்ட திருத்தத்தை கைவிட்டார் பினராயி விஜயன்

கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய போலீஸ் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறுவதாக கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார்.

போலீஸ் சட்டத்தில் 118-ஏ என்ற புதிய பிரிவை சேர்க்க கடந்த மாதம் கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, சமூக ஊடகங்களில் யாரையாவது அவமதித்தோ, அவதூறாகவோ சித்தரித்து  தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால் அது கைவிடப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments