'7 நாள்களில் மறைந்துபோகும் செய்திகள்' - புது வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ் அப்!

0 13437

வாட்ஸ் அப் செயலியில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தானாக மறைந்து போகும், Disappearing Messages எனும் புது வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியில், சமீப காலமாகவே Disappearing Messages வசதியைக் கொண்டு வர முயற்சிகள் நடந்து வந்தன. இதுவரை பீட்டா வடிவில் இருந்த இந்த வசதி தற்போது வாட்ஸ் அப்பின் இரண்டு பில்லியன் பயனர்களும் பயன்படுத்தும் விதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பும் செய்திகளை மறைய வைக்கும் கட்டுப்பாடு, பயனர்கள் கையில்தான் இருக்கும். வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அணைத்து  வைக்கலாம். ஆனால், குழுக்களில் அனுப்பும் செய்திகள் மறைவது அந்தந்த குழுக்களின் அட்மின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அனுப்பிய செய்திகள் மறைய 7 நாட்கள் என்கிற கால அளவை வாட்ஸ் அப் நிர்ணயித்துள்ளது.

ஆன்ட்ராய்டு, iOS, மற்றும் லினக்ஸ் அடிப்படையில் இயங்கு முறை சாதனங்கள் உட்பட, வாட்ஸ்அப் வலை மற்றும் டெஸ்க்டாப் இயங்குதளத்துடன் 'Disappearing Messages' அம்சம் கிடைக்கிறது.

'Disappearing Message’ வசதியானது, ஏழு நாட்களுக்குப் பிறகு புகைப்படங்களையும் வீடியோக்களையும் தானாகவே அழித்துவிடும். மேலும், இரு தரப்பினருக்கும் இடையெ செய்திகள் மறைந்து போவதற்குமுன்பு , ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கலாம் அல்லது தானாகவே நீக்கப்படுவதற்கு முன்பு செய்திகளை நகலெடுக்கலாம் (Copy OR BackUp) அல்லது, தானாக பதிவிறக்குவதன் (AutoBackUp) மூலம் புகைப்படங்கள் அல்லது பிற உள்ளடக்கத்தையும் சேமிக்கலாம் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments