நிவர் புயல் எச்சரிக்கை - முதலமைச்சரின் பயணத்திட்ட தேதியில் மாற்றம்

நிவர் புயல் எச்சரிக்கை - முதலமைச்சரின் பயணத்திட்ட தேதியில் மாற்றம்
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் செல்லும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை 31 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.
அந்த வகையில், வருகிற 25-ம் தேதி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், 25-ம் தேதி நிவர் புயல் கரையை கடப்பதால், முதலமைச்சரின் பயணத்திட்டம் 25-ம் தேதிக்கு பதிலாக 27ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
Comments