புத்தாண்டில் 5 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்

0 26932
புத்தாண்டில் 5 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்

தார் எஸ்யுவி வாகனம் பெற்றுள்ள அபரிதமான வரவேற்பை தொடர்ந்து மேலும் 5 மாடல் வாகனங்களை புத்தாண்டில் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. 

அவற்றில் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட eKUV100 மற்றும் XUV300 எலக்ட்ரிக்  SUV ஆகிய மின்சார வாகனங்களும் அடக்கம் என கூறப்படுகிறது. 

eKUV100யின் விலை 8.25 லட்சம் ரூபாயில் ஆரம்பிக்கும். பிரபல மாடலான  எக்ஸ்யுவி 500, புதிய வடிவத்துடன் பெட்ரோல் ஆப்ஷனுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திராவின் புகழ்பெற்ற மாடலான ஸ்கார்பியோவும் அடுத்த ஆண்டு புதுப்பொலிவுடன், பெட்ரோல் ஆப்ஷனுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மற்றோர் மாடலான TUV300 பிஎஸ் 6 தரத்துடன் வெளிவர உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments