அமெரிக்காவில் உணவகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம மனிதன்

அமெரிக்காவில் உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
நெப்ரஸ்கா மாகாணத்தில் உள்ள பெல்லேவு என்ற இடத்தில் உள்ள உணவகத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதன் திடீரென நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்து நிலைகுலைந்து விழுந்தனர். அப்போது அருகில் பட்டாசுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசாரும், தீயணைக்கும் படையினரும் மக்களை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments