போலீஸ் அவசர சட்டத்தின் மூலம் ஊடக செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது - பினராயி விஜயன்

0 1696
போலீஸ் அவசர சட்டத்தின் மூலம் ஊடக செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது - பினராயி விஜயன்

கேரளாவில் காவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அவசர சட்டத் திருத்தத்தால், ஊடக சுதந்திரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதலை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தின் படி, தனிநபரை சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டுபவர்கள், அவமானப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

இந்த அவசரச் சட்டம், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்ப்புகள் வந்த நிலையில், பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடக செயல்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்று பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார். சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்குட்பட்டு யாரும் யாரைவேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments