இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படை நடத்திய கூட்டுப் பயிற்சி நிறைவு

0 1193
இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படை நடத்திய கூட்டுப் பயிற்சி நிறைவு

சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளுடன் இணைந்து இந்திய கடற்படை நடத்திய கூட்டுப் பயிற்சி நிறைவடைந்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் 3 நாடுகள் பங்கேற்ற கூட்டுப்பயிற்சி சனிக்கிழமை துவங்கியது. 2- வது நாளான இன்று, இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் ஐ.என்.எஸ். காமோர்த்தா, கார்முக் ஏவுகணைகள், இந்த பயிற்சியில் பங்கேற்றன.

3 நாடுகள் பங்கேற்ற கூட்டுப் பயிற்சிக்கு, இந்தாண்டு சிங்கப்பூர் கடற்படை தலைமை ஏற்று நடத்தியது. கடல் பாதுகாப்பை மேம்படுத்துவது - பரஸ்பர புரிதலை வளர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இந்த கூட்டு ப்பயிற்சி நடத்தப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments