தன்னிறைவு பெற்ற ஊர்களே தற்சார்பு இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும் - பிரதமர் மோடி

தன்னிறைவு பெற்ற ஊர்களே தற்சார்பு இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும் - பிரதமர் மோடி
தன்னிறைவு பெற்ற ஊர்களே தற்சார்பு இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர், சோன்பத்ரா மாவட்டங்களில் ஐயாயிரத்து 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூவாயிரம் ஊர்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அவர், விந்திய மலை, பண்டேல்கண்ட் பகுதிகளில் பல ஆறுகள் பாய்ந்தும் அவை வறண்ட பகுதிகளாக உள்ளதாகத் தெரிவித்தார்.
இதனால் இப்பகுதி மக்கள் பிழைப்புத் தேடிப் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதாகத் தெரிவித்தார். இந்நிலையை மாற்ற 41 லட்சம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே குழாய்களில் நீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
Comments