தமிழகத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு நவம்பர் 25 முதல் அனுமதி

0 1736
தமிழகத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு நவம்பர் 25 முதல் அனுமதி

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் நிபந்தனைகளுக்கு உட்பட்டுக் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், மார்கழி மாதத்தில் இசை விழாக்கள் நடத்த அனுமதி வேண்டி பாரதிய வித்யா பவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இதை ஏற்று நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அரங்க நிகழ்ச்சிகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும், அதிகப்பட்சமாக 200 பேர் பங்கேற்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

திறந்தவெளி கலாச்சார நிகழ்ச்சிகளில் அதிகப்பட்சம் 200 பேர் வரை பங்கேற்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தச் சென்னையில் மாநகரக் காவல் ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. அனைத்து சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, சமயம் தொடர்பான கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை நீடிக்கிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments