ராம்பூர் நவாபின் சொத்துக்களை பங்கிடுவது தொடர்பான வழக்கில் சொத்து மதிப்பு ரூ. 2664 கோடி என மதிப்பீடு

0 4867
ராம்பூர் நவாபின் சொத்துக்களை பங்கிடுவது தொடர்பான வழக்கில் சொத்து மதிப்பு ரூ. 2664 கோடி என மதிப்பீடு

உத்தரப்பிரதேசம் ராம்பூர் நவாபின் சொத்து மதிப்பு 2664 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ராம்பூர் நவாப்பாக 1949ஆம் ஆண்டு பதவியேற்ற ராசா அலிகான் 1966ஆம் ஆண்டு மறைந்தார். அவரது சொத்துக்களைப் பங்கிடுவதில் 6 மகள்கள், 3 மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

அரை நூற்றாண்டாக நடந்து வரும் இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நவாபின் சொத்துக்களை மதிப்பிட்டனர்.

காஸ்பாக் அரண்மனையைச் சுற்றி 350 ஏக்கர் நிலம், பெனாசிர் கோதி மற்றும் தோட்டம் 100 ஏக்கர், ஷாபாத் அரண்மனையையொட்டி 250 ஏக்கர், குந்தா தோட்டம் 12 ஆயிரம் சதுர மீட்டர், நவாபின் ரயில் நிலையம் 19 ஆயிரம் சதுர மீட்டர் இவை உள்ளிட்ட அசையாச் சொத்துக்களின் மதிப்பு 2600 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த ஓவியங்கள், பழைய கார்கள், நவாப் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு 64 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments