ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தியது ரப்பர் பாம்பு - படக்குழு

ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தியது ரப்பர் பாம்பு - படக்குழு
ஈஸ்வரன் படத்தில் நடிகர் சிம்பு ரப்பர் பாம்பை தான் பயன்படுத்தியதாக வனத்துறையிடம் படக்குழு விளக்கமளித்துள்ளது.
படப்பிடிப்பில், நடிகர் சிம்பு பாம்பை கையால் பிடித்து சாக்குப்பையில் போடுவது போன்ற காட்சிகள் வெளியான நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு வனத்துறை படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், சென்னை வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் இயக்குனர் சுசீந்திரன், கலை இயக்குனர் ராஜீவன் ஆகியோர் ஆஜராகினர். வீடியோவில் இடம்பெற்றுள்ள பாம்பு ரப்பரால் ஆனது என அதற்கான ஆதாரங்களை படக்குழு வனத்துறையிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, உயிரினங்களை கிராபிக்ஸில் காட்டினாலும், ரப்பரால் ஆனதை பயன்படுத்தினாலுமே மத்திய விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்று பெறுவது அவசியம் என மத்திய விலங்கு நல வாரியம் தெரிவித்துள்ளது.
Comments