பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

0 6282

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று இருப்பவர் பாலாஜி முருகதாஸ்.
 
சீசன் 4 ல் போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான மாடல் பாலாஜி முருகதாஸ் மீது திரு.ஜோ மைக்கில் பிரவின் (M/s. Razzmatazz Group & Miss Tamil Nadu and Miss South India) என்பவர் மானநஷ்ட ஈடு கேட்டு  வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலாஜி  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான சனம் ஷெட்டியுடன் பேசிய போது பிரபல மாடலிங் நிறுவனம் ஒன்றை டுபாக்கூர் கம்பெனி என கூறினார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் மிஸ் சவுத் இந்தியா பட்டதை, அட்ஜெஸ்ட் செய்து பெற்றார் என கூறியுள்ளார் பாலாஜி.

அதாவது நீதிமன்ற டாஸ்க்கிற்காக சனம் எழுதிய புகார் மனுவின் ஸ்கிரீன்ஷாட் வைரலாகியது. பிக்பாஸ்4 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து எலியும் பூனையுமாக இருந்து வந்த பாலாஜியும், சனம் ஷெட்டி.image

இப்படிக் கூறியதன் விளைவாக சமூக வலைதளங்களில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இதற்கு இடையே பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு அவர் மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக திரு.ஜோ மைக்கில் என்பவர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments