சவுக்கார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு...ஜெயமாலா உள்ளிட்ட 3 பேர் சிறையில் அடைப்பு

0 848
சவுக்கார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு...ஜெயமாலா உள்ளிட்ட 3 பேர் சிறையில் அடைப்பு

சென்னை சவுக்கார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஆக்ராவில் கைது செய்யப்பட்ட ஜெயமாலா உள்ளிட்ட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த ஜெயமாலா, விலாஸ், ராஜூசிண்டேவை கைது செய்த தனிப்படை போலீசார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை  டிசம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கைலாஷ், ரவீந்திரநாத் கர், விஜய் உத்தம் கமல் ஆகியோரிடம் 10 நாடகள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதனிடையே, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொடுத்த முன்னாள் விமான படை அதிகாரியை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments