டெல்லியில் இந்த ஆண்டு அதிகமான குளிர் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

0 402
டெல்லியில் இந்த ஆண்டு அதிகமான குளிர் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த ஆண்டு குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் கடல்பகுதியில் தட்பவெட்ப நிலை வழக்கமான நிலையை விட சரிந்து காணப்படுகிறது. இதனால் எழும் குளிர் காற்றலைகள் வெகு தூரம் உள்ள பகுதிகளையும் பாதிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கமே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இக்காலத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்ப நிலை இரண்டு அல்லது இரண்டரை புள்ளி செல்சியஸாக நீடிக்கும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வீடற்ற மக்கள் அரசு அமைத்த அடைக்கல மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே டெல்லியின் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் நீடிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments