மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் கோரிக்கை மனு

0 2796
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அரசு விழாவின் போது, முதலமைச்சர் வழங்கிய மனுக்களில் சென்னை மெட்ரா ரயில் இரண்டாவது திட்டத்திற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் சரிபாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

இதே போன்று காவிரி- குண்டாறு இணைப்புத்திட்டம், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கி நிதி அளிக்க வேண்டும், 10700 கோடி ரூபாய் மதிப்பிலான நடந்தாய் வாழி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும், ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை விருதுநகர் அல்லது தர்மபுரி மாவட்டங்களில் அமைக்க வேண்டும் என்றும், மருத்துவ உபகரண தயாரிப்பு பூங்கா, மருந்து தயாரிப்பு பூங்கா ஆகியவற்றை சென்னைக்கு அருகே அமைப்பதற்கு தொழில் நுட்ப மற்றும் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments