உலகிலேயே தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன் - உள்துறை அமைச்சர் அமித்ஷா

0 4816

உலகிலேயே தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன்

தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் மிகவும் தொன்மையானது

இந்தியா பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது

தமிழகத்தின் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு

கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மீட்சி விகிதம் அதிகம்

தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள், பிரதிநிதிகள் அறிவியல் பூர்வமான தகவல்கள் தருகிறார்கள்

தமிழகத்தை போல கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை

நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை என்ற இரண்டிலும் தமிழகமே இந்த ஆண்டில் முதலிடத்தில் உள்ளது

விவசாயிகள் நலனுக்கான மோடி அரசு மூன்று விதமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது

ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது

13 கோடி வீடுகளுக்கு எரிவாயு வசதி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது

அனைவருக்கும் வீடு திட்டம் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்

அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது

விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஆண்டு தோறும் 6000 ரூபாய் அளிக்கப்படுகிறது

95000 கோடி ரூபாய் இதே போல இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது

நாட்டிலேயே உத்தரபிரதேசம், தமிழகத்தில் மட்டுமே பாதுகாப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது

பாதுகாப்பு வளாகத்தை தமிழகத்தில் அமைத்தது மோடி அரசு தான்

கடல்மாலை திட்டத்தின் கீழ் 2.25 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கீடு

சாலைகளுக்காக 57 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மதுரையில் 12,460 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

7700 கோடி ரூபாய் செலவில் கிழக்கு கடற்கரை சாலையில் பணிகள் தொடங்கி உள்ளன

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியது மோடி அரசுதான்

தமிழகத்திற்கு மைய அரசு அநீதி இழைத்துள்ளதாக தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டுவார்கள்

மத்திய ஆட்சியில் இடம் பெற்றிருந்த பத்தாண்டு காலத்தில் தமிழகத்திற்கு திமுக செய்தது என்ன?

13,14 ஆம் நிதியாண்டு காலத்தில் மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்திற்கு 11,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கு மோடி அரசு 32,750 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உள்ளது

தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி அரசு உறுதுணையாக இருக்கும்

நீண்ட காலத்திற்கு பின்னர் சென்னை வந்துள்ளதால் அரசியல் குறித்தும் பேச விரும்புகிறேன்

ஊழல், குடும்ப அரசியல், சாதிய அரசியலுக்கு எதிராக மோடி வெற்றி கண்டுள்ளார்

குடும்ப அரசியல் நடத்தி வரும் சில கட்சிகளுக்கு நாடு முழுக்க மக்கள் சரியான பாடம் புகட்டி வருகிறார்கள்

அதே பாடத்தை தமிழகத்திலும் மக்கள் புகட்டுவார்கள் என்று நம்புகிறேன்

காங்கிரஸ் - தி.மு.க.வுக்கு ஊழலுக்கு எதிராக பேச என்ன அருகதை உள்ளது

ஊழல் குற்றச்சாட்டை வைக்கும் முன்னால் தங்களின் கடந்த காலத்தை சிலர் திரும்பி பார்க்க வேண்டும்

ஏழைகள் நலனில் மோடி அரசு அக்கறை செலுத்தி வருகிறது

உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டத்தை மோடி மாற்றி அமைத்துள்ளார்

யாழ்பாணம் சென்ற மோடி வீடு இழந்த தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்

மோடி அரசில் பாதுகாப்பு படைகளின் பலம் அதிகரித்துள்ளது

மோடி அரசு பாதுகாப்பு படையின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments