சென்னையில் அமித் ஷா - முதலமைச்சர் வரவேற்பு

0 4919
சென்னையில் அமித் ஷா - முதலமைச்சர் வரவேற்பு

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, அதிமுகவினரும் பாஜகவினரும் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி ஆலோசனையில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று பிற்பகலில் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து, ஆலந்தூர், அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், அடையாறு வழியாக சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு அமித்ஷா சென்றார். வழிநெடுக்க பாஜகவினரும் அதிமுகவினரும் அவருக்கு வரவேற்பளித்தனர்.

இதனால் உற்சாகமடைந்த அமித்ஷா, காரில் இருந்து இறங்கி நடந்தபடியே தொண்டர்களுக்கு கை அசைத்து வரவேற்பை ஏற்றார்.

தமக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படங்களாக, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அமித்ஷா, சென்னை வந்தடைந்தேன், அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இருப்பது என்றும் தனக்கு மகிழ்ச்சியே, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன் என தமிழிலேயே அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments