தொடர் மழை...குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

0 2241
தொடர் மழை...குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் குளங்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் குறுக்குச்சாலை, வெங்கடாசலபுரம், சுப்பிரமணியபுரம், சிந்தலக்கரை, மீனாட்சிபுரம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 36 குளங்கள் நிரம்பியுள்ளன.

மானாவாரிப் பகுதிகளில் குளங்கள் நிரம்பியுள்ளதால் இந்த ஆண்டு விவசாயம் செழிப்புடன் இருக்கும் என்றும், தட்டுப்பாடின்றிக் குடிநீர் கிடைக்கும் என்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. இருப்பினும் மழையளவு குறைவு என்பதால் தேனி மாவட்டத்தில் 20 விழுக்காடு குளங்களே நிரம்பியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துக் குளங்கள் வேகமாக நிரம்பி மறுகால் பாய்கிறது. வயல்களை உழுவது, நெல் நாற்று நடவு செய்வது உள்ளிட்ட விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

தொடர் மழையால் ஆத்தூர் பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது

கடந்த வாரத்தில் திண்டுக்கல்லில் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.

ஆத்தூர் சீத்தாராமன் குளம், கருங்குளம், சித்தையன்கோட்டை குளம், வாடிக்குளம், அழகர்நாயக்கன்பட்டி குளம், சித்தரேவு தாமரைக்குளம் போன்ற குளங்களில் தொடர் மழை பெய்து வருவதாலும், தாண்டிகுடி மலை பகுதியில் பெய்து வரும் மழையாலும் ஆத்தூர் பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து குளங்கள் வேகமாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

இதனால், இப்பகுதியில் விவசாயம் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெல், வாழை மற்றும் பூக்கள் உள்ளிட்ட விவசாய பணிகளை விவசாயிகள் செம்மையாக செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments