தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை திமுக முழுமையாக ஏற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Comments