சவுகார்பேட்டை கொலை வழக்கு: மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை சென்னை அழைத்து வந்து போலீஸ் விசாரணை

0 1472
சவுகார்பேட்டை கொலை வழக்கு: மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை சென்னை அழைத்து வந்து போலீஸ் விசாரணை

சென்னை சவுகார்பேட்டையில் மாமனார், மாமியார், கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை, டெல்லியில் இருந்து சென்னை கொண்டுவந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பைனான்சியர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே மூவரை கைது செய்து, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரரும் வழக்கறிஞருமான விலாஷ், ராஜூ ஷிண்டே ஆகிய மூவரும் ஆக்ரா போலீசார் உதவியுடன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்த மூவரையும் தனிப்படை போலீசார் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments