ஒரு தலை காதல் ; காதலித்த பெண் தம்பியுடன் சென்றதால் அண்ணன் தற்கொலை

0 55032
தற்கொலை செய்துகொண்ட பெரியகருப்பன்

துரை, பாலமேடு அருகே ஒரே பெண்ணைக் காதலிப்பதில் அண்ணன் தம்பிக்கிடையேயான போட்டியில், தம்பியுடன் காதலி ஓட்டம் பிடித்ததால் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கேள்விப்பட்ட காதலர்களும் விஷம் குடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சல்லிகோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன் ((26)). டிப்ளமோ படித்து விட்டு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது தம்பி சின்னகருப்பன் (24) மைக்செட் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பெரியகருப்பன் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியில் வசிக்கும் தனது உறவுக்கார 16 வயது பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட தம்பி சின்ன கருப்பன் அந்தப் பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார், அந்தப் பெண்ணும் சின்ன கருப்பனைக் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, வெளியூருக்குச் சென்றுவிட்டனர். தான் உயிருக்கு உயிராகக் காதலித்த பெண் தன் தம்பியுடன் ஓட்டம் பிடித்ததை அறிந்ததும் மனமுடைந்த பெரிய கருப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரிய கருப்பன் இறந்ததைக் கேள்விப்பட்ட காதல் ஜோடியினர் துக்கம் தாங்க முடியாமல் விஷம் குடித்தனர். இருவரும் மயங்கிய நிலையில், அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காதலி யாருக்குச் சொந்தம் என அண்ணன் - தம்பிக்கிடையே ஏற்பட்ட போட்டியில், தம்பியுடன் காதலி சென்றுவிட்டதால் அண்ணன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அதைக் கேள்விப்பட்ட தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments