பத்து மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ தகவல்

0 1408
பத்து மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ தகவல்

பத்து மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என, சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இம்முறை ரத்து அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

டெல்லியில் இதுதொடர்பாக பேசிய சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்றார்.

பொதுத்தேர்வை எப்படி நடத்தலாம் என்று திட்டம் வகுத்து வருவதாகவும், தேர்வுமுறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments