தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 26891
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி தவிர பிற மாவட்டங்களில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments