ஓவன் நுட்பத்தில், மைக்ரோவேவ் ஆயுதம்.! சுடுதண்ணீர்போல் உடலை கொதிக்கவைக்கும் வெப்ப ஆயுதம்.!

0 4559

அண்மை நாட்களாக, பரபரப்பாக பேசப்படும், மைக்ரோவேவ் ஆயுதம், எனப்படும் நுண்ணலை ஆயுதம் எப்படி இயங்குகிறது.? மைக்ரோவேவ் ஓவனுக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்?, வெப்ப ஆயுதமாக எப்படி மாறுகிறது? என்பதை விளக்குகிறது, இந்த செய்தித்தொகுப்பு..!

உணவுத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவனில், உணவு பொருளை ஊருடுவி, அதிஉயர் அதிர்வெண் கொண்ட நுண்ணலைகள் வெப்பத்தை ஏற்படுத்தும். இதைப்போலவே, மைக்ரோவேவ் ஆயுதங்களும், உடலில், வெப்ப மாறுபாட்டை ஏற்படுத்தி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்திவிடும்.

"எலக்ட்ரோ மேக்னடிக்" முறையில் செயல்படும் இந்த மைக்ரோவேவ் ஆயுதங்கள், மனிதத் தோலின் அடிப்பகுதியில் இருக்கும் நீர்த் துகள்களை சூடாக்கும். இதனால், கடுமையான உஷ்ணம் உடலை தாக்குவதால் அந்தப் பகுதியில் மக்களால் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் ஏற்படும். சுமார் 1 கி.மீ. தொலைவு வரையில், அதிலும் குறிப்பாக, அரை கிலோ மீட்டருக்கும் சற்று கூடுதலாக உள்ள மக்களை இந்த ஆயுதங்களால் விரட்ட முடியும்.

மைக்ரோவேவ் ஆயுதங்களின் தாக்கம் பெரும்பாலும் மனிதர்களுக்கு, அதிக ஒளியுடன் எரியும் சூடான ஒளிவிளக்கைத் தொடும்போது ஏற்படும் உணர்வோடு ஒப்பிடப்படுகிறது. உண்மையில் இந்த ஆயுதம் மனித உடலில் தண்ணீரை சூடாக்கும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.

இந்த நுண்ணலை ஆயுதம் அமெரிக்காவிடம் உள்ளது. அதற்கு ADS என பெயரிட்டு, மைக்ரோவேவ் ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 2014ஆம் ஆண்டு, விமான கண்காட்சி ஒன்றில் வைத்து காட்சிப்படுத்திய சீனா, "Poly WB-1" என்று அதற்கு பெயரிட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்து கலவரம் மூளும்போது, போராட்டக்காரர்களை விரட்டியடிக்க, அதிகப்படியான உடல் உஷ்ண மாறுபாட்டை ஏற்படுத்தும், நுண்ணலை ஆயுதங்களை, அமெரிக்கா பயன்படுத்துகிறது.

இந்த நுண்ணலை ஆயுதங்கள், "நான்-கான்டாக்ட் வார் ஃபேர்" என்ற பீரங்கி குண்டுகள், தோட்டாக்கள் பயன்படுத்தப்படாத யுத்த நேரங்களில், பயன்படுத்தப்படுகின்றன. மைக்ரோவேவ் ஆயுத தாக்குதலின்போது, இலக்காகும் நபருக்கு, உடல் உஷ்ணம் அதிகமாகி, தொடர்ச்சியான வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி, உடல்நலம் குன்றும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கிழக்கு லடாக்கில், இந்திய துருப்புகள் மீது, சீன ராணுவம், நுண்ணலை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சர்ச்சைக்கு பதிலளித்துள்ள இந்திய ராணுவம், அது ஒரு பொய்ச் செய்தி என திட்டவட்டமாக மறுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments