அமித்ஷா நாளை சென்னை வருவதையொட்டி சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்

0 2313
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருவதையொட்டி சுமார் மூவாயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருவதையொட்டி சுமார் மூவாயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

நாளை பிற்பகல் 1.40 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா, மாலையில் சேப்பாக்கதில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்.

பிரதமருக்கு அடுத்து அதிமுக்கிய பொறுப்பில் அமித்ஷா இருப்பதால், அவரது வருகையை ஒட்டி விமான நிலையம், லீலா பேலஸ் மற்றும் கலைவாணர் அரங்கம் ஆகிய மூன்று இடங்களிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.  ஆயுதப்படை, கமாண்டோ படை வீரர்களும் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments