INDvsAUS 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்டுகள்..! போட்டிகளை காண ஆவலுடன் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணியுடன், இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருக்கும் 5 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன.
ஆஸ்திரேலிய அணியுடன், இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருக்கும் 5 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது.
போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதால், 5 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 24 மணி நேரத்தில் விற்பனையாகி விட்டன. கொரோனா பாதிப்பு காரணமாக தடைபட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜுலை மாதம் தொடங்கிய நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் போட்டிகளில் முதன் முறையாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
Comments