டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசால் ஓய்வு எடுப்பதற்காக கோவா சென்றுள்ளார் சோனியாகாந்தி

0 959
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓய்வு எடுப்பதற்காக கோவா சென்றுள்ளார்.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓய்வு எடுப்பதற்காக கோவா சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஆஸ்துமா மற்றும் மார்பு தொற்று காரணமாக அவர் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு, அவருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து காற்று மாசு குறைவாக இருக்கும் இடத்திற்கு சென்று சிறிது காலம் தங்கியிருக்குமாறு சோனியாகாந்தியை மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

சென்னை அல்லது கோவாவுக்கு அவர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தனது மகன் ராகுல்காந்தியுடன், கோவா தலைநகர் பனாஜிக்கு சோனியாகாந்தி சென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments