லண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை... சென்னை முதியவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது

0 2199

லண்டனை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை முதியவரை, 6 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார்.இவரின் 17 வயது மகள் லண்டனில் படித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக சிறுமி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் மருத்துவர்களிடம் சிகிச்சை அழைத்து சென்றுள்ளனர். பிறகு, சிறுமி படிக்கும் பள்ளியின் மூலம் உளவியல் நிபுணர்கள் ஆலோசனைக்கு சிறுமியை உட்படுத்தினர்.

கவுன்சிலிங்கில் சிறுமி அதிர்ச்சிக்கரமான பல்வேறு தகவல்களை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதாவது, கடந்த 2014 -ஆம் ஆண்டு சிறுமி விடுமுறைக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது , சிறுமியின் உறவினரான 68 வயதான முதியவர் ஒருவர் சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் தான் சிறுமி மன அழுத்தத்திற்கு ஆளாகி கடந்த 6 ஆண்டுகளாக மனரீதியாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால், அவரது படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் மூலம் இந்த தகவல் தெரிந்து அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஆன்லைன் மூலமாக கடந்த 11-ஆம் தேதி அளித்த புகார் அளித்தனர். இந்த வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments