பிரதமர் மோடியும், பூடான் பிரதமரும் சேர்ந்து பூடானில் இரண்டாம் கட்ட ரூபே அட்டையை வெளியிட்டனர்

0 775
பிரதமர் மோடியும், பூடான் பிரதமர் லோட்டாய் ஷெரிங்கும் சேர்ந்து, காணொலி வாயிலாக பூடானில் இரண்டாம் கட்ட ரூபே அட்டையை பயன்பாட்டுக்கு வெளியிட்டனர்.

பிரதமர் மோடியும், பூடான் பிரதமர் லோட்டாய் ஷெரிங்கும் சேர்ந்து, காணொலி வாயிலாக பூடானில் இரண்டாம் கட்ட ரூபே அட்டையை பயன்பாட்டுக்கு வெளியிட்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்த அட்டை இந்தியாவுக்கு வரும் பூடான் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறினார். பூடான் தேசிய வங்கி வாயிலாக வெளியிடப்படும் இந்த ரூபே அட்டையால், ஒரு லட்சம் ரூபாய் வரை ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். 20 லட்சம் ரூபாய் வரை கொள்முதல் செய்ய முடியும் என மோடி தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய-பூடான் ஒப்பந்தம் கையெழுத்தானதை சுட்டிக்காட்டிய மோடி பல துறைகளில் இரு தரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தியாவில் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியவர் மோடி என நிகழ்ச்சியில் பேசிய பூடான் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments