இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 3ம் நாள் கலந்தாய்வு-47 மருத்துவ இடங்களுக்கு 318 பேருக்கு அழைப்பு

0 693
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 3-ம் நாள் கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், 47 பல் மருத்துவ இடங்களுக்கு 318 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 3-ம் நாள் கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், 47 பல் மருத்துவ இடங்களுக்கு 318 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18-ம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது. முதல் 2 நாட்களில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள 313 எம்.பி.பி.எஸ் இடங்களும் முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள 92 பல் மருத்துவ இடங்களில் 45 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

எஞ்சிய 47 பல் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், அதற்காக 318 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments