தேர்தல் பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு-கே.என். நேரு தகவல்

0 877
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.என். நேரு, சட்டமன்ற தேர்தலுக்காக 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் கட்சியினர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், மு.க. ஸ்டாலினின் தூதர்களாக 15 பேர் 234 தொகுதிகளுக்கும் 75 நாட்களில் 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து, 1500 கூட்டங்களிலும், 500 உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, புதிய கட்சிகள் வரலாம், வராமலும் போகலாம் என மழுப்பலாக பதிலளித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி நல்ல நிலையில் உள்ளதாகவும், எந்த கலகத்தையும் கூட்டணியில் ஏற்படுத்த முடியாது என்றும் கே.என். நேரு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments