ஒரு நபரை தவிர்த்து அனைவருக்கும் தொற்று.. தோராங்க் கிராமத்தில் உச்சம் தொட்ட கொரோனா..!

இமாச்சல் பிரதேசத்தில் மணாலிக்கு அருகே லாகுல் பள்ளத்தாக்கில் இருக்கும் தோராங்க் என்ற கிராமத்தில் ஒரு நபரை தவிர்த்து அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் மணாலிக்கு அருகே லாகுல் பள்ளத்தாக்கில் இருக்கும் தோராங்க் என்ற கிராமத்தில் ஒரு நபரை தவிர்த்து அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மணாலி-லே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மொத்தம் 42 பேர் வசிப்பதாகவும், அவர்களில் பலர் கடுங்குளிர் காரணமாக குலுவிற்கு சென்று விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாகுல் பள்ளத்தாக்கில் கொரோனா அலை தீவிரமாக வீசுகிறது. இதன் காரணமாக இந்த பள்ளத்தாக்கில் உள்ள பனிமூடிய கிராமங்களுக்கு வர சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோத்தங் சுரங்கப்பாதை வழியாக செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Comments