கர்நாடகாவில் போதை பொருள் சப்ளை செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் கைது

0 384
கர்நாடகாவில் போதை பொருள் சப்ளை செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் கைது

கர்நாடகா மாநிலம் பெங்களூரில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து போதை பொருள் சப்ளை செய்து வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார், 4 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் சப்ளையில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடிக்க உளவுப்பிரிவில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில், டெல்லியில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியதில், போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

நைஜீரியா, ஆப்ரிகா நாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்து டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments