உத்தரப்பிரதேசத்தில் சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து...6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

0 541
உத்தரப்பிரதேசத்தில் சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து...6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் இன்று அதிகாலை சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். பிரயாக்ராஜ் -லக்னோ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணிக்புர் காவல்நிலைய போலீசார் உடல்களைக் கைப்பற்றி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு வாகன ஓட்டுனர்களும் வாகனத்தை கட்டுப்பாடு இல்லாமல் இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments