வரலாறு காணாத வகையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

0 11238
வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், வைகை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், வைகை ஆற்றில் வரலாறு காணாத வகையில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக வருசநாடு, வெள்ளிமழை, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைபகுதி களில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

வைகை அணைக்கு, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, ஆற்றுப்பாலங்களில் பொது மக்கள் யாரும் நிற்கக் கூடாது என அபாய ஓலி எழுப்பி, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆயிரத்து 719 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதே நிலை நீடித்தால் வைகை அணை இன்னும் இரண்டொரு நாட்களில் முழு கொள்ளளவான 71 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments