ஆட்சி முறையில் தொழில்நுட்பத்திற்கு முதலிடம் அளிக்கும் மத்திய அரசு - பிரதமர்

0 721

தொழில்நுட்பத்திற்கு முதலிடம் அளிப்பதே மத்திய அரசின் ஆட்சி முறை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூரு டெக் சம்மிட் எனப்படும் தொழில்நுட்ப மாநாட்டை, காணொலி மூலம் தொடங்கி வைத்து, பிரதமர் உரையாற்றினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும், தொழில்நுட்ப தீர்வுகளுக்கும் சந்தையை உருவாக்குவதில் மத்திய பாஜக அரசு வெற்றிபெற்றுள்ளதாக அவர் அப்போது குறிப்பிட்டார்.

அனைத்து திட்டங்களிலும் தொழில்நுட்பத்திற்கு முக்கிய பங்கு உள்ளதாகவும், தொழில்நுட்பத்தின் மூலம் மனித மாண்பை உயர்த்தியிருப்பதாகவும், ஒரேயொரு கிளிக் மூலம் லட்சக் கணக்கான விவசாயிகள் அரசின் நிதியுதவியை பெற்றிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments