எனது உயிருக்கு ஆபத்து.. விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் பகீர் குற்றச்சாட்டு..!

0 7097
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை பின்தொடர்ந்து வந்து கடத்த முயற்சித்தவர்களில் ஒருவரை பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த போதும், காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் அவரை விட்டு விட்டதாக குற்றம்சாட்டினார்.

தன்னை பின்தொடர்ந்து எடுத்த 30க்கும் மேற்பட்ட வீடியோ ஆதாரங்களை டிஐஜியிடம் அளித்துள்ளதாகவும், தனது தம்பி மகன் செந்தில்ராஜன் இதன் பின்னணியில் இருப்பது, பிடித்துக் கொடுத்த நபர் அளித்த தகவல் மூலம் தெரியவந்துள்ளது என்றும் வைகுண்டராஜன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments