தருமபுரி : சாலையை கடக்க முயன்ற ஸ்கூட்டி மீது மோதிய பைக், விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி

0 5085

ருமபுரி  மாவட்டம் அதியமான்கோட்டையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது, அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் 2 சிறார்கள் தூக்கிவீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  

பாளையாத்தனூர் மற்றும் தோக்கம்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமிகள் 2 பேர் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்துள்ளனர். அவர்கள் சேலம் - ஓசூர் பைபாஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் விடுதி அருகே சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், சிறுமிகளின் இருசக்கர வாகனத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த சிறார்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய சிறுவர், சிறுமிகளை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது நார்த்தம்பட்டியை சேர்ந்த முரளிதரன் என்ற 17 வயது சிறுவன் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், விபத்தில் சிக்கிய இரண்டு இருசக்கர வாகனங்களையுமே விதியை மீறி சிறார்களே இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments