ஈஸ்வரன் பட போஸ்டர் - டீசரை உடனே நிறுத்துமாறு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்

0 4869

டிகர் சிம்பு நடித்துள்ள " ஈஸ்வரன்" படத்தில் பாம்பு காட்சி இடம் பெற்றதாக எழுந்த புகாரில், போஸ்டர் மற்றும் டீசரை வெளியிடக்கூடாது என உத்தரவிட்ட மத்திய விலங்குகள் நல வாரியம், ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. "

ஈஸ்வரன்" படத்தில்  நடிக்கும் சிம்பு, பாம்புடன் தோன்றும் காட்சி போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. மரக்கிளையில் ஊர்ந்து செல்லும் பாம்பை சிம்பு கையில் பிடித்து, சாக்கு பையில் போடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களிலும் பரவியது.

இப்படத்தின் முன்னோட்ட காட்சி, தீபாவளி நாளில் வெளியானது. விலங்குகளை கிராபிக்ஸ் காட்சி என்றாலும் கூட தடையில்லா சான்று பெற்ற பின்னரே பயன்படுத்த முடியும் என்ற விதி இருப்பதை மத்திய விலங்குகள் நல வாரியம் சுட்டிக்காட்டி உள்ளதால், சிம்புவின் "ஈஸ்வரன்" படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments