தேசிய கீதம் தவறாக உச்சரிப்பு : சர்ச்சையில் சிக்கிய பீஹார் கல்வி அமைச்சர்

0 2128
தேசிய கீதம் தவறாக உச்சரிப்பு : சர்ச்சையில் சிக்கிய பீஹார் கல்வி அமைச்சர்

தேசிய கீதத்தின்பாடல் வரிகளை தவறாக உச்சரித்ததாக பீஹார் கல்வி அமைச்சர் மெஹ்வால் சவுத்திரி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இதுதொடர்பாக, ராஷ்டீரிய ஜனதா தள் கட்சி, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 38 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ பதிவில், மெஹ்வால் சவுத்திரி, தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய கீதத்தின் பாடல் வரிகளை சரியாக உச்சரிக்காமல் தடுமாறினார்.

"பாரத் மாதா கீ ஜெய்" என்றும் "வந்தே "என்றும் அமைச்சர் குறிப்பிட, கூடியிருந்த குழந்தைகள் "மாதரம்" என கூறுகிறார்கள்.

ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது ? என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 67 வயதான கல்வி அமைச்சர் மெஹ்வால் சவுத்திரி மீது ஏற்கனவே, ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments