நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

0 1098
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சமாதானபுரம் பகுதியில் தெருக்கள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

நேற்றிரவு பெய்த கனமழையால் சமாதானபுரம், எம்கேபி நகர், திருவள்ளுவர் தெரு, ஆசாத் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளில் இருந்து வெளியேறிய குடியிருப்புவாசிகள் குழந்தைகளுடன் சாலையில் தஞ்சமடைந்தனர்.

மழைநீர் வடியும் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், செல்ல இடமின்றி தெருக்களுக்குள் தேங்கி கிடப்பதாகவும், மழைநீரோடு சேர்ந்து கழிவு நீரும் கலந்து சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.

இதே நிலை ஆண்டுதோறும் வாடிக்கையாகி வருவதாக கூறிய அப்பகுதிமக்கள், போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments