கொரோனா பரவலால் பிரிந்திருந்த முதிய தம்பதி... கணவனைக் கண்டதும் ஆனந்தப் பெருக்கோடு கட்டியணைத்துக் கொண்ட மனைவி

கொரோனா பரவலால் பிரிந்திருந்த முதிய தம்பதி... கணவனைக் கண்டதும் ஆனந்தப் பெருக்கோடு கட்டியணைத்துக் கொண்ட மனைவி
இங்கிலாந்தில் கொரோனாவால் பிரிந்திருந்த வயது முதிய தம்பதியினர் நேரில் பாக்கும் போது கட்டியணைத்து கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டார்லிங்டன் என்ற இடத்தைச் சேர்ந்த 91 வயதான ஹாரி வில்ஸ்டனும் இவரின் மனைவி 87 வயதான டோரினும் கடந்த 67 வருடங்களாக இணைபிரியா தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா காரணத்தால் இருவரும் சில மாதங்களாக பிரிந்திருந்த இருவரும் ஹோட்டல் ஒன்றில் சந்திக்க மகள்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது கணவனைக் கண்ட டோரின், ஆனந்தப் பெருக்கோடு கட்டியணைத்துக் கொண்டார். பின்னர் கணவனின் மடியில் அமர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
கொரோனா பரவலால் பிரிந்திருந்த முதிய தம்பதி... கணவனைக் கண்டதும் ஆனந்தப் பெருக்கோடு கட்டியணைத்துக் கொண்ட மனைவி #England | #CoronaVirus | #Covid19 https://t.co/tJ42Zls5pc
— Polimer News (@polimernews) November 19, 2020
Comments