ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்தல் மற்றும் அதன் பராமரிப்பு பணிகளுக்கு கூடுதலாக 21 கோடியே 79 லட்சம் ரூபாய் வழங்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 57 கோடியே 96 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் டிஜிட்டல் வீடியோ காட்சி வசதி மற்றும 5 ஆண்டு பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு கட்டணம் மற்றும் 5 ஆண்டுகளுக்கான மின் நுகர்வு கட்டண செலவினத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.
Comments