இந்தியா- அமெரிக்க உறவை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை - ஜோ பைடன்

0 2795
இந்தியா- அமெரிக்க உறவை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை - ஜோ பைடன்

இந்தியா- அமெரிக்க உறவை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுமென அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், மோடியுடன் இணைந்து செயல்பட ஜோபைடன் விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை எதிர் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சர்வதேச பொருளாதார மீட்சி, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments