லடாக் எல்லையில் வீரர்கள் தங்க நவீன தங்குமிடங்கள்

லடாக் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுகாக நவீன தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
லடாக்கில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால், பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. அங்கு வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும் என்பதாலும், உச்ச பனிக்காலத்தில் நாள் ஒன்றுக்கு முப்பது முதல் 40 அடி உயரம் வரை பனிப்பொழிவு இருக்கும் என்பதாலும் வீரர்களை காக்க ராணுவம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வீரர்கள் தங்க நவீன வசதிகளுடன் கூடிய தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மின்வசதி, குடிநீர், அறையை கதகதப்பூட்டும் வசதி,மருத்துவ, சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ரோந்து பணியில் ஈடுபடும் வீரர்களுக்காக அமெரிக்காவில் இருந்து கடும் குளிரை தாங்கும் சிறப்பு கவச ஆடைகளும் வாங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 15,000 ஆடைகள் வாங்கப்பட்டு, முன்னணி வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments